திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட திருமலை நகர் கிராமத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடலோர காவல் நிலையம் சென்னை பிரிவு காவல் துறையினர் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி திருமலை நகர் கிராம மக்களுடன் நடைபெற்றது. திருமலை நகர் கிராமத்தில் கடற்கரையோரம் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கடலோர பழவேற்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சபாபதி,சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரவீந்திரன்,உதயகுமார் ஆகியோர் பொதுமக்களுடன் கடற்கரையோர பாதுகாப்பு, மற்றும் விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடினர்.
காவலர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களுக்கு மரியாதை செய்து பாராட்டு தெரிவித்தனர். திருமலை நகர் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கடலோர காவல் படைக்கு உதவியாக திருமலை நகர் கிராமத்தைச் சேர்ந்த ஊர் காவல் படையைச் சேர்ந்த பஞ்சுநாதன்,உதயகுமார் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டு பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு கடலோர பழவேற்காடு காவல் நிலைய காவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















