திருவள்ளூர்: திருவொற்றியூர் காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக (எஸ்.ஐ.) 39 ஆண்டுகள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றிய திரு. ஆர். யுவராஜ் அவர்கள், (31.07.2027) அன்று பணி ஓய்வு பெற்றார். அவரது பணி ஓய்வு விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌவுரவித்தனர். குற்றமற்ற, கையூட்டு இல்லாத அவரது 39 ஆண்டுகால காவல் பணி இளம் காவல்துறையினருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாக அனைவரும் பாராட்டினர்.




















