கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரித்தெரு 5 வது கிராஸை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் ஓசூர் TO ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு அரசு குடியிருப்பில் தண்ணீர் பாய்ச்சும் வேலையை செய்து வருவதாகவும்,பின்னர் (15.09.2026) ஆம் தேதி இரவு 09.30 மணிக்கு மஞ்சுநாதன் அவரது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும், மறுநாள் (16.09.2026) அன்று காலை சுமார் 05.00 மணிக்கு தண்ணீர் விடுவதற்காக மஞ்சுநாதன் குடியிருப்பிற்கு வந்து பார்த்த போது மோட்டார் கேபிள் ஒயர் காணாமல் போனதையடுத்து அக்கம் பக்கம் விசாரித்தும், தேடிபார்த்தும் கிடைக்கவில்லை என மஞ்சுநாதன் (16.09.2026) ஆம் தேதி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து ஓசூர் டவுன் போலீசார் மோட்டார் கேபிள் ஒயரை திருடிய குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















