கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இராயக்கோட்டை – சூளகிரி சாலை, கோட்டை 2 வது தெருவில் உள்ள குற்றவாளி வீட்டின் பின்புறம் சென்று சோதனை செய்ததில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 27,990 /- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















