கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் மற்றும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவீரப்பள்ளி STRR ரோடு தமிழக எல்லை மற்றும் சொக்கநாதபுரம் கக்கனூர் ரோடு, கல்லுப்பள்ளி பிரிவு ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 8 யூனிட் M-Sand இருந்தது. அனுமதியின்றி M-Sand கடத்திய இரண்டு எதிரிகளை கைது செய்து M-Sand கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















