திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கோட்ட சார் ஆட்சியராக பணியாற்றியவர் திரு.அப்துல் ராசிக் அவர்கள். தற்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொன்னேரி வருவாய் துறை அலுவலர்கள் சார்பில் பாராட்டு விழாவும்,பிரிவு உபச்சார விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியினை பொன்னேரி சாராட்சியர் அலுவலக துணை வட்டாட்சியர் சம்பத் தொகுத்து வழங்கினார். பொன்னேரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார்,கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















