சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் குளோபல் மெஷின் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி மருத்துவ முகாம் குளோபல் மெஷின் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கு மருத்துவமனை சேர்மன் மருத்துவர் குமரேசன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக எல்.ஐ.சி. முகவர் சங்கத் தலைவர், மதுரை கோட்டம் மரிய லுயிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காரைக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் ருக்மா சரவணன் மற்றும் காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் சார்பில் இஸ்மாயில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் நான்கு சிறப்பு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். மேலும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை, பிசியோதெரபி மற்றும் ஆயில் தெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















