மதுரை: மதுரை மாநகர காவல் – மதுரை மாநகரில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் கல்லூரியில் பயிலும் 161 குழந்தைகளுக்கு 2024-2025 ஆண்டிற்கான காவலர் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை ரூ. 30,01,000/-யை (07.09.2026) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. இராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் வழங்கி தனது வாழ்த்துகள் மற்றும் பாரட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) மற்றும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள், அவர்களின் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















