திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த ரெஜிதா (36), இவரது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் மகன் தினேஷ்(33), என்பவர் தச்சு வேலை பார்த்து வந்த நிலையில் வீட்டில் பீரோவில் இருந்த 7 தங்க நகை திருடினார். இது குறித்து நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு நகையை திருடிய தினேஷை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















