திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் FQL, VG ஆன்லைன் செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 7-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து மதுரையில் இருந்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















