திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (07.09.2026) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்பினர் (சுமார் 90 பேர்) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு வழங்கிய விநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எடுத்துரைத்தார்.




















