திருப்பத்தூர்: ஆம்பூர் உட்கோட்டம், உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தம்பாக்கம் பகுதியில் உள்ள சிவகாமி ஸ்டோரில், குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் மற்றும் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையின் போது, கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தினேஷ்குமார் (30) மற்றும் விஜயலட்சுமி (24). ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குட்கா பொருட்களை பறிமுதல் செய்து இருவரை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் மற்றும் காவலர்களை, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.




















