திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த ரெங்கமலையில் பிரசித்தி பெற்ற மல்லீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கு சாமி கும்பிட சென்ற தாராபுரம், சங்கன் வலசு பகுதியை சேர்ந்த சுதாகர்(52). என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் மலை மேலே சென்று சுதாகரனின் உடலை மலையிலிருந்து மீட்டு கீழே கொண்டு வந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















