திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர அடையாளை அட்டை வழங்கும் முகாமில் தலைமை மருத்துவர் விக்னேஷ் தலைமையிலும் , பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்கர்பாபு முன்னிலையிலும் நடைபெற்றது இம்மாமில் மாற்றுத்திறனாளிகளின் தகுதியின் அடிப்படையில் அனைத்து சேவைகளான தேசிய அடையாள அட்டை, உபகரணங்கள், மற்றும் வீல்சேர் கை கட்டை கால் கட்டை ஸ்கூட்டர், உதவித்தொகை உள்ளிட்டவைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து சான்றுகள் வழங்கப்பட்டன. நேரடியாக திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல துறை அதிகாரி திரு குமார் அலுவலர் வழிகாட்டலின்படி நடத்தப்படும் முகாமை பொன்னேரி நியமன கவுன்சிலர் கருணாகரன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் வட்டாரத்தில் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் மேலும் பங்குபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுகின்ற வகையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி உரிமை திட்ட பணியாளர்கள் 30,பேர் கலந்துகொண்டு வேண்டிய உதவிகளை செய்தனர், நியமன கவுன்சிலர் பிரேமா, கலாவதி, டி என் ரைஸ் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி சதீஷ், சோழவரம் அஸ்வின், கும்மிடிப்பூண்டி அருண்பாலாஜி, சமூக ஆர்வலர் ஷகில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை கேட்டு வட்டாச்சியரிடம் நியமன கவுன்சிலர் கருணாகரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இம்மு முகாமில் கடந்த பத்து வருடங்களாக ராகவா டிசைபில்டு பீப்பிள்ஸ் டிரஸ்ட் நிறுவனர் எஸ் ரகோத்தமன் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















