திண்டுக்கல்: நத்தம் ராக்காச்சிபுரம் பகுதியில் சாகுல்அமீது என்பவரது வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணம் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி, மதுரையைச் சேர்ந்த விஜய், ரங்கராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 46 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், திருடிய நகைகளை தங்க நகைகள் என நினைத்து அடகு வைக்க முயன்றபோது அவை கவரிங் நகைகள் என தெரியவந்ததாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















