திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து அரியன்வாயல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் வெட்டை கண்டித்தும், அதனை சரிசெய்ய தவறிய மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் முதியோர்கள் குழந்தைகள் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்தனர்.
மேலும் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் மாணவர்களின் கல்வி பாதிப்பதாக கூறி மெழுகுவர்த்தி, மின் விளக்கு ஏற்றி வைத்து சிறுவர்கள் பாடம் எழுதினர். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் துணை மின் நிலையங்களை ஏற்படுத்தி, மின்மாற்றிகள் சீரமைத்து தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















