திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், திண்டுக்கல் ஊரக உட்கோட்ட உதவி காவல் துறை துணை கண்காணிப்பாளர் மரு.மஞ்சிமா அவரது நேரடி மேற்பார்வையில், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். மாயாராஜலட்சுமி மற்றும் சார்பு ஆய்வாளர். சக்திவேல் தலைமையிலான காவல் துறையினர் வத்தலக்குண்டு – பழனி பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள கருப்பசாமி கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இன்னோவா கார் மற்றும் 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 1) பாண்டியராஜன் (38). த/பெ. செல்வம், ஜெயம் நகர், கொட்டப்பட்டி, திண்டுக்கல் மற்றும் 2) கஸ்பார் (37). த/பெ. செல்வராஜ், மடத்து அந்தோணியார் தெரு, என்.பஞ்சம்பட்டி என்பது தெரியவந்தது.
காரை சோதனை செய்தபோது, அதில் விற்பனைக்காக பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 120 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 120 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இன்னோவா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
நடப்பாண்டில் இதுவரை குட்கா சம்பந்தமாக 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3570 கிலோ கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தினாலோ, சேமித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















