திருவள்ளூர்: தமிழக அரசு 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினத்தன்று சிறப்பித்து வருகிறது. தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். உதவி ஆசிரியர்கள் 15 ஆண்டும், தலைமையாசிரியர்கள் 20 ஆண்டும் சிறப்பாகப் பணியாற்றியிருக்க வேண்டும் நடப்பாண்டில் மொத்தம் 396 ஆசிரியர்கள் இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 342 பேரும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற பிரிவினரும் அடங்குவர். இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளை வழங்கினார்.
இதில் தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள மீஞ்சூர் ஒன்றியம், கல்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.த.விஜயலட்சுமி அவர்களுக்கு மீஞ்சூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விழாவில் சங்க நிர்வாகிகள் ஆசிரியர்கள் சந்திரசேகர்,பாண்டியராஜன்,ஆனந்த் சாந்தகுமார், மகராஜன், முரளிதாஸ், சிவகுமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















