சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் வெல்பர் அசோசியேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நான்கு சிறப்பு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினர். மேலும், கண் பரிசோதனை, பிசியோதெரபி மற்றும் ஆயில் தெரப்பி உள்ளிட்ட சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















