பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். V. லலித்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் Foot Patrol மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், குற்றச் செயல்களைத் தடுப்பது, பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிதல் மற்றும் சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுதல் ஆகிய நோக்கங்களுடன் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.




















