மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மதுரை மாநகராட்சிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆறாக சாலையில் ஓடியது மூன்று நாட்கள் ஆகியும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் சரி செய்யாத நிலையில், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இது குறித்து செய்தி நேற்று பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சிகளில் வெளிவந்த நிலையில் சம்பந்தப்பட்ட திருவேடகம் பகுதிக்கு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பணிகள், முடியும் வரை மதுரை மாநகராட்சிக்கு செல்லக்கூடிய குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆகையால் இரண்டு நாட்களுக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் படியும் மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விழங்கக்கூடிய
இந்த ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மூலம் குழாய் பகுதியில் இருந்த களிமண்கள் மலை போல் அந்த பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நடைபெற்று வரும் போதே நாட்சதக் குழாயில் குடிநீர் வந்து கொண்டிருப்பதால் பணிகள் மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















