திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல் நகர் குயவர் தெருவை சேர்ந்த ஷேக்பரீத்(28). இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை கடந்த 18-ம் தேதி மர்ம நபர் திருடி சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஆட்டோவை திருடி கோயமுத்தூரில் பதுங்கி இருந்த சபியுல்லா(27). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆட்டோவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















