மதுரை: மதுரை கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், காரைக்குடி வித்தியாகிரி பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஹரிஷ்னா சுசி 2-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். 20 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்ட இலக்கை துல்லியமாக எய்து வெற்றி பெற்றார். இதற்கு முன்பு 5 மீட்டர் தூர இலக்கில் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், தற்போது 20 மீட்டர் தூர இலக்கை வெற்றிகரமாக எய்தி சிறப்பிடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி ஹரிஷ்னா சுசியை பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















