தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வினோத் (24) என்பவர் கைது செய்யப்பட்டார். சோதனையின்போது 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. எதிரி மீது NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




















