தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர், அந்தந்த உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்கான சட்டங்கள், சைபர் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




















