இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் நெ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, அவர்கள் முன்னிலையில், தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 69 – வது நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து, சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 69 – வது நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள், போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்கள். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















