திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூம்பாறை பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் ராமர்(25). என்பவரை சில நாட்களுக்கு முன்பு கொலை செய்தது தொடர்பாக ராகு (எ) ராகவேந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ரகு (எ) ராகவேந்திரனின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் துர்காதேவி அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் ரகு (எ) ராகவேந்திரனை கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















