திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டி பொன்னம்மாள் நகரை சேர்ந்த சைனி(40). இவர் தூங்கிக்கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த ராபின்(29). என்பவர் எட்டி பார்த்ததாக தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த ராபின், சவேரியார் பாளையம், நேருஜி நகரை சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வகுமார்(26). அழகர்சாமி மகன் வெங்கிடுகிருஷ்ணன்(26). உள்ளிட்டோர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து வீசி எறிந்தனர். இது குறித்து புறநகர் DSP.சங்கர் உத்தரவின்பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ராபின், வெங்கிடுகிருஷ்ணன் செல்வகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து மேலும் சிலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















