திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டி பொன்னம்மாள் நகரை சேர்ந்த போஸ் மனைவி சைனி(40). இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த அன்புராஜ் மகன் ராபின்(29). என்பவர் எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது இது குறித்து இன்று இரவு சுமார் 9 மணி அளவில் ராபின் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ராபின் அவரது தம்பி சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் தகராறு ஈடுபட்டு பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அங்கிருந்த மின்சார கம்பத்தின் மீது எரிந்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் புறநகர் டிஎஸ்பி சங்கர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக ராபின் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















