கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகமுட்லு அரசு மேல்நிலைப்பள்ளியில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதையினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை காவல்துறை துணைத் தலைவர் திரு. முனைவர் பா. மூர்த்தி, IPS, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி.எஸ். அனிதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் கள்ளச்சாராய ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், விழிப்புணர்வு சிறப்புரை வழங்கப்பட்டது. மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















