கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் அப்பேருந்தில் பயணம் செய்த மூன்று நபர்களிடம் சுமார் 2.500 கிலோ கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2.500 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து மூன்று குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















