கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் – பெங்களூர் நியூ பைபாஸ் ரோடு, பொம்மாண்டப்பள்ளி சர்க்கிள் அருகே வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 10 யூனிட் M-Sand இருந்தது. அனுமதியின்றி M-Sand கடத்திய இரண்டு குற்றவாளிகளை கைது செய்து M-Sand கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து செய்து இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















