விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















