ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு காவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. பெருந்துறை டிஎஸ்பி D.G. சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பாதுகாப்பு காவலர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில் பெருந்துறை, சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். மேலும், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான பாதுகாப்பு காவலர்களும் பங்கேற்றனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் உள்ள வங்கி கிளைகளில் போதிய பாதுகாப்பு காவலர்களை நியமிக்க காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

N.செந்தில்குமார்




















