திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் அருணகிரி எஸ்டேட் சொந்தமானவர் ஜான் டோமினிக் ஜெயக்குமார் இவருடைய தோட்டத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரு குரங்கு இறந்த நிலையில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குரங்கை உடற் கூறுவு ஆய்வு செய்த மருத்துவக் குழுவினர் குரங்கு குண்டடிப்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கொடைக்கானல் வனத்துறையினர் கடந்த ஐந்து நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவருடைய வீட்டை வனச்சரக தலைமையில் சோதனை செய்த போது ஒரு ஏர்கன் மற்றும் ஐந்து ஏர்கன் புல்லட்டுகள் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து தோட்ட உரிமையாளரிடம் குரங்கு இறந்ததற்கான காரணத்தை அவரிடம் கேட்டதற்கு அவர் குரங்கை ஏர்கன் வைத்து சுட்டதாக வன அதிகாரிகள் முன் வாக்குமூலம் ஒப்புக்கொண்டார். அதனை அடுத்து
கொடைக்கானல் வனசரகர் உத்தரவின்படி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















