திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டை பிரிவு அருகே இரு சக்கர வாகனம் – இரண்டு கார் மோதி விபத்து. விபத்தில் இரு சக்கர வாகனம் நொறுங்கியது . இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மற்றும் காரில் வந்த பெண் உள்ளிட்ட 3 பேர் படுகாயம். சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர். மேற்படி சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















