தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்–கீழப்பாவூரில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் இரண்டாம் நாளான (16.08.2026), போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, IPS., பங்கேற்று போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் மற்றும் பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி வேல்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.



















