தென்காசி: (15.08.26) முதல் (21.08.2026)வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பாவூர்சத்திரம் _கீழப்பாவூரில் நடைபெற்றுவருகிறது (18.08.26) நான்காம் நாளாக (பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவலர் தினம்)கடைபிடிக்கப்பட்டது. நிகழ்வில் காலை 7 மணியளவில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவலர் தினம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது பேரணியை பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி சு.வேல்கனி தொடங்கி வைத்தார். மாலை 7.00 மணியளவில் நடைப்பெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது நிகழ்வில் வரவேற்புரையாற்றிய வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் முத்துமணி வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் தந்தை அருட்திரு ம.செல்வராஜ் வழங்கினார்கள். நிகழ்வின் சிறப்புரையினை கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.குளோரி தேவ ஞானம் வழங்கினார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி சு.வேல்கனி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பாளர் , பேராசிரியர் முனைவர் இரா.வில்சன் அருள் ஆனந்தன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் திருமதி சு.பவாணி இலக்குமன தங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் நன்றியுரையினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஞா.ஜோசப் அருண்குமார் வழங்கினார். நிகழ்வில் முனைவர் இரா ரேச்சல் மேனகா , தீபன் பாக்கியராஜ், சிவராஜா, முனைவர் சுபமங்களம், திருமதி நேவிஸ் கலந்து கொண்டனர். நிகழ்வில் மன்னன் டியுசன் சென்டர் உரிமையாளர் திரு T.சோபாகர் 150 மாணவர்கள் கலந்துகொள்ள நிகழ்வு தேசிய கீதத்தோடு நிறைவுபெற்றது.



















