சிவகங்கை: காரைக்குடியில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் அழகப்பா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 2,100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். தற்போது 7 நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வெளிநோயாளர் சேவைகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக இதய சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















