காவல்துறை அத்துமீறல் மற்றும் ஊழலைத் தடுக்க ‘உள் கண்காணிப்பு பிரிவு’ தொடக்கம்: மாவட்டம் வாரியாக தொடர்பு எண்களை வெளியிட்ட டிஜிபி!
தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells (உள் கண்காணிப்பு பிரிவு) அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்:
- காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்கும் வகையில், மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக பிரத்யேக அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (Mobile/WhatsApp) எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாள விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான, பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.Internal Vigilance Cell செயல்பாடுகளை உயர் காவல் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
எனவே பொதுமக்கள் அச்சமின்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநகரம் / மாவட்டம் வாரியான Internal Vigilance Cell தொடர்பு எண்கள்:
| எண் | மாநகரம் / மாவட்டம் | கைபேசி / வாட்ஸ்அப் எண்கள்
| 1 | சென்னை மாநகரம் | 7871723000 |
| 2 | தாம்பரம் மாநகரம் | 6374514428 |
| 3 | ஆவடி மாநகரம் | 9840018110 |
| 4 | சேலம் மாநகரம் | 9626207262 |
| 5 | திருப்பூர் மாநகரம் | 8438761616 |
| 6 | திருச்சி மாநகரம் | 7871202100 |
| 7 | மதுரை மாநகரம் | 8300021100 |
| 8 | கோயம்புத்தூர் மாநகரம் | 8148919100 |
| 9 | திருநெல்வேலி மாநகரம் | 9952540100 |
| 10 | காஞ்சிபுரம் | 9940031700 |
| 11 | செங்கல்பட்டு | 9500779100 |
| 12 | திருவள்ளூர் | 9498181359 |
| 13 | விழுப்புரம் | 9944889161 |
| 14 | கள்ளக்குறிச்சி | 8870353799 |
| 15 | கடலூர் | 9677100551 |
| 16 | வேலூர் | 8807258532 |
| 17 | இராணிப்பேட்டை | 7305877732 |
| 18 | திருப்பத்தூர் | 9600903373 |
| 19 | திருவண்ணாமலை | 7695878100 |
| 20 | திருச்சி | 7448878100 |
| 21 | புதுக்கோட்டை | 9500550543 |
| 22 | கரூர் | 8807709299 |
| 23 | பெரம்பலூர் | 8903631122 |
| 24 | அரியலூர் | 7904932100 |
| 25 | தஞ்சாவூர் | 9840438678 |
| 26 | திருவாரூர் | 9944336551 |
| 27 | நாகப்பட்டினம் | 9489901106 |
| 28 | மயிலாடுதுறை | 9087755100 |
| 29 | கோயம்புத்தூர் | 7540083100 |
| 30 | ஈரோடு | 9655220100 |
| 31 | திருப்பூர் | 9042227100 |
| 32 | நீலகிரி | 9789800100 |
| 33 | சேலம் | 9629390203 |
| 34 | நாமக்கல் | 9566637105 |
| 35 | தருமபுரி | 7604904492 |
| 36 | கிருஷ்ணகிரி | 9025552100 |
| 37 | மதுரை | 9003719004 |
| 38 | விருதுநகர் | 9600975100 |
| 39 | திண்டுக்கல் | 7904300491 |
| 40 | தேனி | 9626207262 |
| 41 | இராமநாதபுரம் | 7904114100 |
| 42 | சிவகங்கை | 7598788108 |
| 43 | திருநெல்வேலி | 9498101740 |
| 44 | தென்காசி | 9385678039 |
| 45 | தூத்துக்குடி | 9489929270 |
| 46 | கன்னியாகுமரி | 7358776100 |



















