மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், சேடபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் குடும்ப சண்டை காரணமாக. வேலு (60/15). த/பெ சாத்தன் கண்ணன் (25/15). த/பெ வேலு பேச்சியம்மாள் (55/15), க/பெ வேலு சுகன்யா (35/15). க/பெ பாண்டி சங்கீதா (17/15), த/பெ பழனி சஞ்சித் (12/15). த/பெ பழனி வினித் (10/15). த/பெ பழனி ஆகிய 7 நபர்கள் வீட்டோடு எரித்து கொல்லப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 1) பாண்டீஸ்வரி (21/15). க/பெ கண்ணன், 2) முருகேஸ்வரி (40/15). க/பெ தங்கவேலு, மற்றும் 3) ராஜபாண்டி (19/15). த/பெ தங்கவேல் ஆகிய 3 நபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த மதுரை 6-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி மற்றும் ராஜபாண்டி ஆகிய 3 நபர்களும் குற்றவாளிகள் என இன்று (18.08.2026) தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு குற்றவாளிக்கும் தலா 8 ஆயுள் சிறைத் தண்டனைகள், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல்துறை, கொலை உட்பட கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தந்து தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















