கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அசோக் என்பவர் ரோந்து பணி செய்து வரும்போது அவரை அவதூறாக பேசி அருவாள் கொண்டு வெட்ட முயற்சித்த கோட்டார் கலைநகர் பகுதியை சேர்ந்த சுந்தர்சிங் என்பவரது மகன் சுதன் @ நண்டு சுதன் (33). என்பவர் மீது கோட்டார் காவல் நிலைய குற்ற எண் 280/2026 u/s 296(b), 109, 351(3) BNS கொலை முயற்சி சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரதாப் IAS அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்கள். அவ்வுத்தரவின்படி தற்போது சிறையில் இருந்து வரும் குற்றவாளி சுதன் @நண்டு சுதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேலும் தீவிர படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்கள்.




















