கன்னியாகுமரி: கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலங்கரை விளக்கம் எதிரில் அமைந்துள்ள மாயம்மா கோவில் சமாகத்தில் வெள்ளி நகைகள் மற்றும் பூஜை பொருட்கள் திருடு போயிருந்தது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலிலும், கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் நேரடி மேற்பார்வையிலும், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுந்தர் ராஜ பெருமாள் அவர்கள் தலைமையில் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் பலனாக, கோவிலில் சுமார் 6 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி விரைவாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
புகார் கிடைத்த உடனேயே கன்னியாகுமரி காவல் நிலைய குற்ற எண் 214/2026 U/S 331 (4), 305 (a) BNS இன் கீழ் வழக்கு பதிவு செய்து தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் தீவிர புலனாய்வின் மூலம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஜித் சர்க்கார் என்பவரின் மகன் ஆசிஸ் சர்க்கார் (29). என்பவரை போலீசார் கேரளா எர்ணாகுளத்தில் வைத்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த கன்னியாகுமரி காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.



















