திண்டுக்கல்: திண்டுக்கல், அடியனூத்து, இந்திராகாலனியை சேர்ந்த சவரிமுத்து மகன் குணசேகரன்(43). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் உடல் நல கோளாறு காரணமாக மன உளைச்சலில் கடந்த 15-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மோகனப்பிரியா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















