மதுரை : மதுரை கலைநகர், நேருஜி தெருவில் உள்ள பாரத் பவனில் ” இந்திய பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற முன்னணியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நிறுவனர் தலைவர் டி.எம்.சம்பத். தலைமை
தாங்கினார். ஆயுட்கால உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். துணைத்
தலைவர் எஸ்.சோமசுந்தரம், இணைச்செயலாளர் எம்.முருகன் ஆகியோர் தலைவர் பணியை பாராட்டி பேசினார். சி.ஔவிஜயக்குமார் , லட்சுமணன் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன் கொடுமை தடுப்புச்சட்டம் 1989 நிரபராதிகள் மீது துஷ்பிரயோகம் செய்யப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத் தினார்கள், செயற்குழு உறுப்பினர்கள் வாகை பழனிச்சாமி, சினிமாபட இயக்குனர் ஆர்.என்.கருணாநிதி ஆகியோர் சங்க வளர்ச்சி பற்றி பேசினார்கள் .
புதிதாக சேர்ந்த எம். சந்திரசேகர், சத்தீஸ்குமார் ,வில்வராஜா, உறுப்பினர்களுக்கு சங்கத்தின் கொள்கை விளக்க கையேடு வழங்கப்பட்டது. வில்வராஜா இந்திய மாநிலங்களில் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டார். அவருக்கு வல்லாபாய் படேல் தேசிய ஒருமைப்பாடு விருது கிடைக்க வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள், பொன்ராம், ராமசந்திரன், அஇமூவேமுக மதுரை மாவட்டத்
தலைவர் நாகராஜ் தேவர், திருமங்கலம் அன்னக்கொடி தேவர் , ஏ.பாண்டித்தேவர், பாலசுப்பிரமணியம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக சூப்பிரண்டுகள் கந்தவேல், பாலசுப்பிரமணியம் , இந்திய மருதுபாண்டியர் பேரவைத்தலைவர் கண்ணன், அதன் செயலாளர் டாக்டர் ராம மூர்த்திஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாளர் வழக்கறிஞர் ஏ. ஜெகதீசன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். மேனாள் யாதவா கல்லூரி முதல்வர் அமலதாஸ் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















