விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மல்லாங் கினர் அருகே அயன் ரெட்டியபட்டி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் மல்லாங் கினர் மெயின் ரோட்டுக்கு வர வேண்டி யுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர் இதனால் ரெட்டிய பட்டி கிராம த்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வர பஸ் வசதி வேண்டும் என்று மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு உத்தரவின் பேரில் அயன் ரெட்டியபட்டி கிராமத்திலிருந்து விருதுநகருக்கும், அருப்புக்கோட்டைக்கும் புதிய பஸ் வழித்தடம் தொடங்கப் பட்டது நிகழ்ச்சி யில் அமைச்சர் வன்னியரசு புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்தார் அதன் பிறகு அதே பஸ்ஸில் அமைச்சர் வன்னியரசு பயணம் செய்து அவரது இல்லத்துக்கு சென்று மக்களை சந்தித்தார். போக்குவரத்து துறை பொது மேலாளர் கண்ணன், துணை மேலாளர் நாகராஜ், கிளை மேலாளர் பாலாஜி ,விடுதலை சிறுத்தைகளின் கட்சி மாவட்ட செயலாளர் இனியவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




















