தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தொடர் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இந்நிகழ்வின் போது பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர்களின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், சைபர் கிரைம் இணையவழி மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருப்பது, பாலியல் தொல்லைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், அவசர காலங்களில் உதவி பெறுவதற்கான: 1091 – சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி எண் 100 – காவல்துறை அவசர உதவி எண் 181 – மகளிர் உதவி எண் 1098 – குழந்தைகள் உதவி எண் 1930 – சைபர் கிரைம் புகார் உதவி எண் ஆகிய சேவை எண்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.




















