மதுரை: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், இன்று (13.09.2026) ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது 1) பூமிநாதன் (50 ). நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்கள் 341 பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்ட காவல்துறை, சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.


















