கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதாப் அரசு உயர்நிலைப் பள்ளியில், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் நேரில் சென்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியின்போது, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் (Good Touch & Bad Touch), போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.மேலும், மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என அறிவுரைகள் வழங்கினர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்



















