திண்டுக்கல்: திண்டுக்கல் மலைப்பட்டி ரோடு, செட்டிகுளம் பின்புறம் உள்ள ஆப்பிள் அவன்யூ பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்குதகவல் கிடைத்தது. இதையடுத்து, திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் திண்டுக்கல் சர்வேயர் நகர் பகுதியைச் சேர்ந்த சவரியான் மகன் பன்னீர்செல்வம் (31),என்பது தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















